சமீபத்தில் ஒரு வழக்கமற்ற மீவுளிர் விண்முகில் வெடிப்பானது (supernova explosion) பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உணரப்பட்டது.
இந்த வெடிக்கும் நட்சத்திரமானது LSQ14fmg மீவுளிர் விண்முகில் வெடிப்பு என அழைக்கப் பட்டது.
இது மிகவும் மெதுவாக ஒளிர்வானதாக மாறியது. இது இதற்கு முன்னர் எப்பொழுதும் நிகழ்ந்திராத வகையில் நிகழ்ந்த பிரகாசமான வெடிப்புகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
இந்த வெடிக்கும் நட்சத்திரமானது டைப் Ia மீவுளிர் விண்முகில் எனப்படுகின்றது. அதிலும் குறிப்பாக “சூப்பர் சந்திரசேகர் குழுவின்” உறுப்பினராகவும் இது கருதப் படுகின்றது.
டைப் Ia மீவுளிர் விண்முகிலானது இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான ஒன்றாக ஒரு முக்கியக் கூறாக விளங்குகின்றது.
இருண்ட ஆற்றல் ஒரு அறியப்படாத ஆற்றலாக விளங்குகின்றது. இது தற்போதைய பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமாக விளங்குகின்றது.