TNPSC Thervupettagam

முகநூல் மெய்நிகர் நாணயம்

June 19 , 2019 1892 days 605 0
  • 2020 ஆம் ஆண்டில் “லிப்ரா” என்ற ஒரு மெய்நிகர் நாணயத்தை வெளியிட முகநூல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மின்னணு வணிகம் மற்றும் சர்வதேசப் பண வழங்கீடுகளிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது.
  • தனது புதிய டிஜிட்டல் நாணயத்தை நிர்வகிக்கவிருக்கும் ஜெனீவாவில் உள்ள லிப்ரா மன்றம் என்ற நிறுவனத்துடன் 28 பங்காளர்களை இது இணைத்துள்ளது.
  • முகநூல் நிறுவனம் லிப்ராக்களைச் சேமிக்க, செலுத்த மற்றும் செலவிட வேண்டி டிஜிட்டல் பணப்பைகளை அளிக்கவிருக்கும் காலிப்ரா என்ற ஒரு துணை நிலை அமைப்பை உருவாக்கியிருக்கின்றது.
  • முகநூளின் தகவலின் படி, ரோமன் எடை அளவீடுகள், நீதிக்கான ஜோதிட அடையாளம் மற்றும் சுதந்திரத்திற்கான பிரெஞ்சு வார்த்தை ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு “லிப்ரா” என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்