மிகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மறைந்த முகமது ரஃபி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயத்தினை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
"முகமது ரஃபி கி ஜனம் சதாப்தி" என்ற ஒரு வெட்டெழுத்து ஆனது நாணயத்தின் மேல் விளிம்பில் தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டிருக்கும்.
தனது 40 ஆண்டுகாலத் தொழில் முறை வாழ்க்கையில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள ஒரு பழம்பெரும் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.
இவர் தனது பன்முகத் திறன் மற்றும் குரல் பாணிக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.