உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
உருகுவே நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டேட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ், முகாபேவின் நியமனத்தை அறிவித்திருந்தார்.
பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய கொடையாளர்களான இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகியோர் இந்த நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். முகாபேவின் 37 வருட அதிகாரத்துவ அரசியலில் ஜிம்பாப்வே நாட்டின் சுகாதாரம் மற்றும் நலத்திற்கான கட்டமைப்பு மோசமடைந்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.