முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள், 2024
March 24 , 2024 249 days 235 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், 2024 ஆம் ஆண்டு முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது யானைகளின் இடமாற்றம் மற்றும் போக்குவரத்தை மிகவும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முகாமில் அடைக்கப்பட்ட யானைகளை இடம் மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள்
உரிமையாளர் யானையைப் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும்போது,
யானைகள் தற்போதையச் சூழ்நிலையை விட வேறொரு சூழ்நிலையில் சிறந்தப் பராமரிப்பைப் பெறும் என்ற நேரங்களில்; அல்லது
ஒரு மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர் யானையைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கான சூழ்நிலை "பொருத்தமாகவும் சரியானதாகவும் இருக்கும் என கருதும்" போது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ஆனது வன மற்றும் முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் மீதான வர்த்தகத்தைத் திட்டவட்டமாகத் தடை செய்தது.
இருப்பினும், அந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, முகாமில் அடைக்கப் பட்ட யானைகளை இடம் மாற்றச் செய்வதற்கு முதல்முறையாக விலக்கு அளிக்கப் பட்டது.
கேரளாவில் முகாமில் அடைக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவிற்கு 400 ஆகக் குறைந்துள்ளது.