இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) கீழ் இந்தியா மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள், பசுமை ஆற்றல் சார் பொருளாதாரத்தின் உக்கிய கூறுகள், நியாயமான பொருளாதாரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த IPEF நிர்வாகக் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகின்றன.
IPEF அமைப்பின் கட்டமைப்பு ஆனது 2022 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதியன்று டோக்கியோ நகரில் தொடங்கப்பட்டது.
IPEF என்பது அதன் 14 உறுப்பினர் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டமைப்பு ஆனது வர்த்தகம் (பிரிவு I), விநியோக சங்கிலி மீள்தன்மை (பிரிவு II), தூய்மை பொருளாதாரம் (பிரிவு III), மற்றும் நியாயமான பொருளாதாரம் (பிரிவு IV) ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.