நாட்டின் சுதந்திரத்திற்காக என்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்தியாவின் சுதந்திரப் போராளிகளின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்பிற்கும் கௌரவமளிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று மூன்று புரட்சிகரமான சுதந்திரப் போராளிகளான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த மூன்று புரட்சியாளர்களும் இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கட்சி சங்கத்தின் (HSRA) ஓர் அங்கமாக இருந்தனர் மேலும் அவர்கள் பொதுவுடைமைவாத/சோசலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர்.
தவறான அடையாளம் காணப் பட்டதால், அவர்கள் காவல்துறை ஆய்வாளர் ஜேம்ஸ் ஸ்காட்டுக்குப் பதிலாகப் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான ஜான் சாண்டர்ஸைக் கொன்றனர்.