ஹைவ் (Hive) எனப்படும் முக்கிய பணையத் தீநிரல் வலையமைப்பின் இணைய தளத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது .
ஒரு சர்வதேசப் பணையத் தீநிரல் வலையமைப்பான இது நிறுவனங்களை மிரட்டி நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான பணம் பறித்தல் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு வலையமைப்பாகும்.
இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் இந்தியாவின் டாடா பவர், ஜெர்மனி நாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனமான மீடியா மார்க், கோஸ்டாரிகாவின் பொதுச் சுகாதாரச் சேவை போன்றவை அடங்கும்.
ஹைவ் என்பது ஒரு பணையத் தீநிரல் சேவை வழங்கீட்டு வலையமைப்பாகச் செயல்பட்டது.
இலக்கு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் நுழைவதற்கும், முற்றிலும் முடக்குவதற்கும் மற்றும் பணம் செலுத்துவதற்கும் அதன் மென்பொருள் மற்றும் பிற சேவைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு அமைப்பினையும் இது அனுமதிக்கிறது.