TNPSC Thervupettagam

முக்கிய மற்றும் உத்தி சார் கனிமங்களின் பட்டியல்

August 24 , 2024 94 days 115 0
  • 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் (MMDR) முதல் அட்டவணையின் பகுதி Dயில் உள்ள டான்டலம் உள்ளிட்ட 24 கனிமங்களின் பட்டியலை முக்கிய மற்றும் உத்தி சார் கனிமங்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • டான்டலம் என்பது Ta குறியீடு மற்றும் அணு எண் 73 கொண்ட அரிய உலோகம் ஆகும்.
  • இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் ஆனது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் டான்டலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு கனிமங்களை ஆராய்வதில் 6 திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
  • டான்டலம் தாது இயற்கையில் அரிதாகவே கிடைக்கிறது.
  • இது பொதுவாக கொலம்பைட்-டான்டலைட் (பொதுவாக கோல்டன் என குறிப்பிடப் படுகிறது) தாதுவில் காணப்படுகிறது.
  • இது டங்ஸ்டன் மற்றும் ரீனியம் ஆகிய கனிமங்களின் விட மட்டுமே அதிகமான உருகு நிலையைக் கொண்டுள்ளது.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகியவை டான்டலம் உற்பத்தி செய்யும் முக்கிய உற்பத்தியாளர்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்