TNPSC Thervupettagam

முக்கியக் கனிமத் தொகுதிகளின் முதல் ஏலம்

December 10 , 2023 224 days 166 0
  • இந்தியாவில் முதன்முறையாக முக்கிய மற்றும் மூலோபயக் கனிமங்களை ஏலம் விடுவதற்கான செயல்முறையானது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசானது 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தினை (MMDR) 2023 ஆம் ஆண்டு MMDR திருத்தச் சட்டம் மூலம் திருத்தியமைத்துள்ளது.
  • இதன் கீழ், 24 முக்கிய மற்றும் மூலோபயக் கனிமங்கள் 1957 ஆம் ஆண்டு MMDR சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மேலும், திருத்தப்பட்ட இந்த சட்டமானது இந்த கனிமங்களின் தொகுதிகளை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
  • இந்தத் தொகுதிகளின் ஏலத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும்.
  • அவை பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் முழுவதும் அமைந்துள்ளன.
  • இந்தியாவில் ஜம்மு & காஷ்மீர்  மற்றும் சத்தீஸ்கர் என இரண்டு இடங்களில் லித்தியம் படிவு தொகுதிகள் உள்ளன.
  • முதன்முறையாக லித்தியம் தாது சுரங்க உரிமைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது.
  • எனினும் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன், உரிமதாரர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகள், கிராம சபை ஒப்புதல் மற்றும் பிற உள்ளிட்ட 15 ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை தனியார் நிறுவனங்கள் பெற வேண்டும்.
  • தற்போதைய நிலவரப்படி, லித்தியம், நிக்கல் மற்றும் தாமிரத்திற்காக பெருமளவில் இறக்குமதியையே இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்