TNPSC Thervupettagam

முக்கியத் துறைகள்

May 6 , 2020 1538 days 606 0
  • மார்ச் மாதத்தில் முக்கியத் தொழிற்துறைகளின் உற்பத்தியானது 6.5% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • இந்தத் தரவானது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட முதல் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
  • கச்சா எண்ணெய், எஃகு, இயற்கை வாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருள், சிமெண்ட், உரங்கள், மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகியவை இந்தியாவின் முக்கியத் தொழில்துறைகளாகும்.
  • முக்கியமான 8 துறைகள் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP - Index of Industrial Production) 40.27% அளவைக் கொண்டுள்ளன. 
  • IIP ஆனது மத்தியப் புள்ளியியல் அமைப்பால் வெளியிடப்படுகின்றது.
  • IIP குறிகாட்டியானது சுரங்கத்  துறை, மின்சாரம் மற்றும் உற்பத்தி ஆகிய மூன்று முக்கியமான துறைகளை அளவிடுகின்றது.
  • IIP ஆனது 2004-05 ஆண்டை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்