முக்கியப் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வு
October 25 , 2024 36 days 80 0
வெப்பமண்டலக் காடுகளில் உள்ள 66 சதவீதம் வரையிலான முக்கியப் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகள் (KBAs) சமீபத்தில் சராசரி வருடாந்திர வெப்பநிலை வரம்பினை எட்டியுள்ளன.
இந்த KBA பகுதிகள் நிலப்பரப்பு, நன்னீர் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தின் உலகளாவிய நிலைத் தன்மைக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் தளங்கள் ஆகும்.
புதிய வெப்பநிலை வரம்புகள் கொண்ட KBA பகுதிகளின் விகிதம் ஆப்பிரிக்காவில் 72 சதவீதமாகவும், இலத்தீன் அமெரிக்காவில் சுமார் 59 சதவீதமாகவும், ஆசியா மற்றும் ஓசியானியாவில் 49 சதவீதமாகவும் இருந்தது.
இலத்தீன் அமெரிக்காவில் உள்ள சுமார் 2.9 சதவீத KBA பகுதிகளும், ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள 4.9 சதவீதப் பகுதிகளும் சமீபத்தில் முற்றிலும் புதிய வெப்ப நிலை வரம்புகளை எட்டியுள்ளன.
ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய பகுதிகளில் 0.02 சதவீத KBA பகுதிகள் மட்டுமே கிட்டத்தட்ட நிலையான வெப்பநிலை வரம்பில் இருந்தன.
34 சதவீத வெப்பமண்டலக் காடுகளில் உள்ள KBA பகுதிகள் இன்றும் புதிய வெப்ப நிலை வரம்புகளை எட்டவில்லை.