அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப் பூர்வ தகவல்களின்படி, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்களின் மந்தநிலை காரணமாக எட்டு முக்கிய தொழில்களின் வளர்ச்சியானது ஜூலை மாதத்தில் 2.1% ஆக குறைந்தது.
8 தொழிற் துறைகள் பின்வருமாறு
1. நிலக்கரி
2. கச்சா எண்ணெய்
3. சிமெண்ட்
4. எஃகு
5. உரங்கள்
6. மின்சாரம்
7. இயற்கை எரிவாயு
8. சுத்திகரிப்புப் பொருள்கள்
தொழில் துறை உற்பத்திக் குறியீட்டில் (Index of Industrial Production - IIP) 40.27% என்ற அளவைக் கொண்டுள்ளன.
IIP என்பது பொருளாதார உற்பத்தித் துறையின் முக்கியமான பொருளாதார குறி காட்டியாகும்.
IIP தரவானது ஒவ்வொரு மாதமும் மத்தியப் புள்ளிவிவர அமைப்பால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.