முசாபர்பூரின் ஷாஹி லிச்சியானது புவிசார் குறியீட்டினைப் பெற்று அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
புகழ்பெற்ற ஷாஹி லிச்சியானது அதன் இனிப்பு, சாறுத்தன்மை, தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்கு பிரபலமானது. இது பீகாரின் முசாபர்பூர் மற்றும் அதனருகில் உள்ள பகுதிகளில் விளைகிறது.
இந்த புவிசார் குறியீடானது இதற்காக விண்ணப்பித்த பீகார் லிச்சி வளர்ப்போர் கூட்டமைப்பின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள்
கட்ராணி அரிசி, ஜர்தாலு மாம்பழம், மகாஹி பான் (வெற்றிலைக் கொடி)