TNPSC Thervupettagam

முசிரிஸ் பற்றிய BBC ஆவணப்படம்

February 25 , 2023 642 days 325 0
  • BBC ஊடகமானது சமீபத்தில் “முசிரிஸ்: 700 ஆண்டுகளாக தொலைந்து போன இந்தியாவின் முதல் வணிக மையம”’ என்ற ஒரு காட்சிப் படத்தினை வெளியிட்டது.
  • முசிரிஸ் என்பது நறுமண (மசாலா) பொருட்கள் வர்த்தகத்திற்கான ஒரு முக்கியப் பண்டைய காலத் துறைமுக நகரமாக விளங்கியது.
  • இது தற்காலத்திய கேரளாவில் முராச்சிப் பட்டணம் என்றும் அழைக்கப்பட்டது.
  • மிளகிற்கு ஈடாக வழங்கச் செய்வதற்காக, தங்கம் ஏற்றப்பட்ட ரோமானியக் கப்பல்கள் முசிரிஸுக்கு வருவதைச் சங்க இலக்கியங்கள் விவரிக்கின்றன.
  • 1341 ஆம் ஆண்டளவில், பெரியாறு ஆற்றுப்படுகையில் உள்ள நீர்நிலைகளின் அமைப்பானது ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், வெள்ளம் மற்றும் பூகம்பம் காரணமாக அழிந்த முசிரிஸ் இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது.
  • முசிரிஸ் பாரம்பரியத் திட்டமானது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு வளங்காப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்