ஏப்ரல் 17 அன்று வங்காள தேசமானது முஜிப்நகர் தினத்தை அனுசரித்தது.
வங்காளத்தின் அவாமி லீக்கை நிறுவியவரான ஷேக் முஜிபூர் ரகுமான் என்பவர் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று கைது செய்யப்பட்டு பாகிஸ்தானிற்கு நாடு கடத்தப்பட்டார்.
அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பைதியாநாத்தலாவில் ஒன்று கூடி வங்காள தேசத்தின் மாகாண அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியானது வங்காள தேசம் சுதந்திர நாடாக உருவாக வழிவகுத்தது.
இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூர்வதற்காக 1998 ஆம் ஆண்டு முன்னாள் மாம்பழத் தோட்டமான பைதியாநாத்தலாவானது முஜிப்நகர் எனப் பெயர் மாற்றப்பட்டது.