TNPSC Thervupettagam

முதன்மை ஒப்பந்ததாரர்களுக்கான புதிய சாளரம்

January 11 , 2022 922 days 455 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது முதன்மை ஒப்பந்ததாரர்கள் என அழைக்கப்படும் பத்திர நிறுவனங்களுக்காக வேண்டி புதிய சிறப்புச் சாளர அமைப்பு ஒன்றினைச் சமீபத்தில் தொடங்கியது.
  • முதன்மை ஒப்பந்ததாரர்கள் என்பவர்கள் அரசிடமிருந்து நேரடியாகப் பத்திரங்களை வாங்கும் ஒப்பந்த நிறுவனங்களாகும்.
  • இவை பிற நிறுவனங்களுக்கு இந்தப் பத்திரங்களை விற்பனை செய்யும்.
  • எனவே, பத்திரங்களை விற்பதில் அரசிற்கு உதவுவதே இவற்றின் ஒரு முக்கியப் பணி ஆகும்.
  • இந்தப் பத்திரங்களை விற்பதற்காக இவை சில கட்டணங்களைப் பெறுகின்றன.
  • பத்திர நிறுவனங்கள் என்பவை பத்திரங்களை உருவாக்கி அவற்றை விநியோகிக்கும் ஒரு பத்திர நிறுவனமாகும்.
  • தற்போது, இந்த முதன்மை ஒப்பந்ததார நிறுவனங்கள் அரசிடமிருந்துப் பத்திரங்களை வாங்குவதெற்கென ஒரு தனிப்பிரிவு (அ) ஒரு சாளர அமைப்பினைக் கொண்டுச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்