இந்தியாவின் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களின் (DTAAs) கீழ் முதன்மை நோக்கச் சோதனை (PPT) முறைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆனது வெளியிட்டுள்ளது.
இது இந்தியா-சைப்ரஸ் DTAA, இந்தியா-மொரீஷியஸ் DTAA மற்றும் இந்தியா-சிங்கப்பூர் DTAA ஆகியவற்றின் கீழ் உள்ள சில விதிகளுக்கு விலக்கு அளிக்கிறது.
வரி ஒப்பந்தங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலான சர்வதேச வரி விதிகளின் ஒரு பகுதியாக PPT உள்ளது.
வரிவிதிப்பிற்கான மூலம் மற்றும் இலாப மாற்றத்தினைத் (BEPS) தடுப்பதற்காக வரி ஒப்பந்தத்தினை அமல்படுத்துவதற்கான பலதரப்பு உடன்படிக்கையின் கீழ் இது ஒரு முக்கிய விதியாகும்.
DTAA ஒப்பந்தங்கள் என்பது ஒரே வருமானம் மீது இரண்டு முறை வரி விதிக்கப் படுவதைத் தடுக்கும் நோக்கிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகும்.