தமிழகச் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையானது முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளானது அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என்று அறிவித்துள்ளது.
முதலாம் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளானது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசரான இவர் சோழர்களின் தலைநகரினை இன்றைய அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்னுமிடத்திற்கு மாற்றி அங்கு பெருவுடையார் ஆலயம் ஒன்றையும் கட்டியவராவார்.
இந்த ஆலயமானது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.