இந்திய அரசாங்கமானது, முதலாவது சர்வதேசத் தொழில்நுட்ப ஈடுபாட்டு உத்தி - குவாண்டம் (ITES-Q) கொள்கையினை வெளியிட்டுள்ளது.
இது குவாண்டம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் (QSTI) மிகப்பெரும் புத்தாக்கத்தினை விரைவுப்படுத்துதல், புதுமைகளை வளர்ப்பது மற்றும் அதன் ஏற்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குவாண்டம் அறிவியலில் பல தொழில்நுட்ப உத்திகளுக்கான இந்தியாவின் தொலை நோக்குத் திட்டத்தினை இந்த உத்தி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இது முதலீடுகள், திறமை மேம்பாடு, அறிவுசார் சொத்து, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைச் செயல்பாடு போன்ற பல்வேறு முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது, 2025 ஆம் ஆண்டினைச் சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாகவும் நியமித்துள்ளது.