TNPSC Thervupettagam

முதலாவது அறை வெப்பநிலை மீக்கடத்தி

October 30 , 2020 1398 days 655 0
  • விஞ்ஞானிகள் கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது அறை வெப்பநிலை மீக்கடத்தியின்  கண்டுபிடிப்பை உறுதி செய்துள்ளனர்.
  • வேதியியல் மாற்றங்களை உருவாக்குவதற்காக இரு வைரங்களின் முனைகளுக்கு இடையே கார்பன், ஹைட்ரஜன் & சல்பர் ஆகியவற்றை அழுத்தி அதனை லேசர் ஒளியுடன் மோதச் செய்து இந்தக் மீக்கடத்தியானது உருவாக்கப் பட்டிருக்கின்றது.
  • பூமியின் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விட 2.6 மில்லியன் மடங்கு அழுத்தத்தில், 15 டிகிரி செல்ஷியஸ்ற்கும் குறைவான வெப்பநிலையில் மின் தடையானது அழிக்கப் படுகின்றது.
  • எனினும், இந்தப் புதிய பொருளின் மீக்கடத்தி திறனானது மிக அதிக அழுத்தத்தில் மட்டுமே வெளிப்படுகின்றது. அதன் மூலம் இது அதன் நடைமுறைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றது.
  • மீக்கடத்திகள் தடை இன்றி மின்சாரத்தைக் கடத்துகின்றன. அதனால் இது எந்தவொரு ஆற்றல் இழப்பும் இல்லாமல் மின் ஓட்டத்தை அனுமதிக்கின்றன.
  • 1911 ஆம் ஆண்டில் மீக்கடத்தும் திறன் கண்டுபிடிக்கப்பட்ட போது இது சுழியத்திற்கு மிக அருகில் (-273.15°C) அமைந்த வெப்பநிலையில் மட்டுமே காணப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்