TNPSC Thervupettagam

முதலாவது ஆமை மறுவாழ்வு மையம்

January 5 , 2020 1659 days 969 0
  • நன்னீர் ஆமைகளுக்கான ஒரு வகையான மறுவாழ்வு மையமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பீகாரில் உள்ள பாகல்பூர் வனப் பிரிவில் தொடங்கப்பட உள்ளது.
  • அரை ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 500 ஆமைகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியும்.
  • நோய்வாய்ப்பட்ட, கடுமையாகக் காயமடைந்த அல்லது கடத்தப்பட்ட ஆமைகளுக்கும் இந்த மையம் சிகிச்சையளிக்க இருக்கின்றது. பின்னர் அந்த ஆமைகள் அதன் இயற்கை வாழ்விடங்களுக்குப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட இருக்கின்றன.
  • அணைகள் மற்றும் தடுப்பணைகள் ஆகியவற்றின் மூலம் இந்த இனங்களின் இழப்பு, மாசுபாடு, சட்டவிரோத வேட்டையாடுதல், மீன்பிடி வலைகள் மூலம் தற்செயலாக சிக்கிக் கொள்தல் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் போன்றவற்றால் ஆமை இனங்கள் அதிக அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்