இந்தியக் கடற்படையானது, சந்தாயக் எனப்படும் அதன் சமீபத்திய ஆய்வுக் கப்பலை படையில் இணைத்துள்ளது.
இது நான்கு ஆய்வுக் (பெரிய) கப்பல்களின் தொடரில் முதல் கப்பலாகும்.
இந்தக் கப்பலின் முதன்மைப் பயன்பாடானது துறைமுகம் சார்ந்த பெரும் அணுகுமுறைகளுக்கான விரிவான கடலோர மற்றும் ஆழ்கடல் நீர் பரப்பியல் சார்ந்த ஆய்வுகளுடன் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பெரு வழித்தடங்களைத் தீர்மானிப்பதும் ஆகும்.
இந்த கப்பல் ஆனது, கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளைச் சேகரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொது பயன்பாடுகளுக்குச் சேவை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் கப்பல் ஆனது, 2021 ஆம் ஆண்டில் படையிலிருந்து நீக்கப்பட்ட பழைய சந்தாயக் கப்பலிலிருந்து தற்போதைய வடிவத்திற்கு மறுவடிவம் பெற்றுள்ளது.