TNPSC Thervupettagam

முதலாவது ஆர்க்டிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்

March 8 , 2021 1268 days 573 0
  • ஆர்க்டிக்கின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை கண்காணிக்க ரஷ்யா தனது முதலாவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
  • கஜகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஏவுகலனில் உள்ள "ஆர்க்டிகா-எம்" என்ற செயற்கைக் கோளுடன் சோயுஸ் - 2.1 பி என்ற ஒரு சரக்கு ராக்கெட்டானது விண்வெளிக்குப் புறப்பட்டது.
  • ஆர்க்டிகா-எம் செயற்கைக் கோளானது ரஷ்யாவின் வடக்குப் பிரதேசத்தையும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பகுதிகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
  • இந்தச் செயற்கைக்கோள் ஆனது பூமியின் வட துருவப் பகுதி மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளின் மேலோட்டப் படங்களை குறைந்தது ஒவ்வொரு 15-30 நிமிடங்களுக்கும் அனுப்பும் திறன் கொண்டது.
  • இந்தச் செயற்கைக் கோள் ஆனது செயல்பாட்டு வானிலை மற்றும் நீர்நிலைச் சிக்கல்களைத்  தீர்க்க வேண்டி அது குறித்த தகவல்களை சேகரிக்கவும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை கண்காணிக்கவும் உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்