இந்த ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது முதலாவது உலக தியான தினத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் நிரந்தரத் தூதரகமானது நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
குளிர்கால நீண்ட இரவு நாளின் கலாச்சார மற்றும் வானியல் முக்கியத்துவத்திற்காக இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
நாக்பூர் நகரில் உள்ள ஆரோக்கியத் துறை சார்ந்த ஒரு புத்தொழில் நிறுவனமான ஹாபில்ட், 2,87,711 பங்கேற்பாளர்களுடன் மிகப்பெரிய காணொளி வாயிலான தியான அமர்வினை நடத்தி ஒரு உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்த ஆண்டின் கருத்துரு : “Inner Peace, Global Harmony!” என்பதாகும்.