உலக வர்த்தக அமைப்பானது (World Trade Organisation - WTO) முதலாவது உலக பருத்தி தின கொண்டாட்டங்களை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடத்தியது.
உலகப் பருத்தி தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு “பருத்தி - 4 நாடுகள்” ஐ.நா பொதுச் சபைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வு உருவாகியது.
பருத்தி -4 நாடுகள்
பெனின்
பர்கினா பாசோ
சாட்
மாலி
இத்தகைய தினமானது ஒரு உலகளாவியப் பண்டமாக பருத்தியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
நோக்கங்கள்
WCD (World Cotton Day) ஆனது பருத்தியின் பல நன்மைகளை அதாவது, ஒரு இயற்கை இழை என அதன் குணங்களிலிருந்து, அதன் உற்பத்தி, உருமாற்றம், வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் வாயிலாக மக்கள் பெறும் நன்மைகள் வரை கொண்டாடுகின்றது.
இது உலகெங்கிலும் உள்ள பருத்திப் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
உலகளவில் குறைந்த அளவில் வளர்ச்சி பெற்ற, வளரும் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களுக்குப் பருத்தி முக்கியமானதாக விளங்குகின்றது.
முக்கியத்துவம்
ஒரு டன் பருத்தியானது சராசரியாக 5 நபர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பினை வழங்குகின்றது.
இது வறண்ட காலநிலைக்கு உகந்த, வறட்சியைத் தாங்கிக் கொள்ளும் ஒரு பயிராகும்.
இது உலகின் விளை நிலங்களில் 2.1 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் இது உலகின் ஜவுளித் தேவைகளில் 27 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றது.
இந்தியாவில்
ஐந்து நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
தேசிய விருது பெற்ற நெசவாளரான பிட்டா ராமுலு என்பவர் கைராட்டையால் நெசவு செய்யப்படுவதன் செய்முறை விளக்கத்தை செய்துக் காண்பித்தார்.
வெங்கடகிரி, சந்தேரி, மகேஸ்வரி மற்றும் இக்காட் ஆகிய ரகத்தைச் சேர்ந்த புடவைகள் போன்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்ட ஆடைகள் இந்த நிகழ்வில் கரிம பருத்தியுடன் காட்சிக்கு வைக்கப் பட்டன.
கர்நாடகாவின் தார்வாடில் வளர்க்கப்படும் இயற்கை வண்ணப் பருத்தியானது அடர் பழுப்பு, நடுத்தர பழுப்பு, பச்சை மற்றும் குழைம வண்ணங்களில் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப் பட இருக்கின்றது.