TNPSC Thervupettagam

முதலாவது உலகளாவியச் சதுப்புநில மதிப்பீடு

May 31 , 2024 31 days 111 0
  • சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் செந்நிறப் பட்டியல் எனப்படுகின்ற இந்த அறிக்கையானது, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) முதல் உலகளாவியச் சதுப்புநில மதிப்பீடு ஆகும்.
  • உலகில் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் பாதி அழியும் அபாயத்தில் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • மதிப்பிடப்பட்ட சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 50% அழியும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.
  • தற்போதுள்ள நிலை மேலும் தொடர்ந்தால் இந்த மதிப்பீட்டில் அடுத்த 50 ஆண்டுகளில் உலகளாவியச் சதுப்புநிலப் பகுதியில் 25% நீரில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டில் சுமார் ~7,065 கிமீ2 (-5%) பரப்பிலான மேலும் அதிக சதுப்புநிலங்கள் அழியும் என்றும், ~23,672 கிமீ2 (-16%) பரப்பிலான நீரில் மூழ்கும் என்றும் கணிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தியச் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
  • வங்காள விரிகுடா பிராந்தியத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் இடையேயும் மற்றும் மேற்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையேயும் பகிர்ந்து கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மிகக் குறைவான கவனம் தேவையுள்ள பகுதிகள் பிரிவில் உள்ளன.
  • இருப்பினும், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் தெற்கில் உள்ள அதன் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பு பேரிடருக்கு உள்ளாகும் நிலையில் உள்ள பகுதியாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்