TNPSC Thervupettagam

முதலாவது காமா-கதிர் கிரகணங்கள்

February 8 , 2023 529 days 303 0
  • நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கியின் சில தரவுகளைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு வகை இரும விண்மீன் அமைப்பில் நிகழ்ந்த முதல் காமா-கதிர் கிரகணங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இத்தகைய வலைப் பின்னல் அமைப்பு என்று அழைக்கப் படுபவை ஒவ்வொன்றிலும், மெதுவாக அதன் இணைப் பகுதியை முற்றிலும் சிதைக்கின்ற ஒரு மீயொளிர் விண்மீன் வெடிப்பு நிகழ்வில் வெடித்துச் சிதறிய மிகுவேக சுழற்சி கொண்ட துடிப்பான மற்றும் வேகமாகச் சுழலும் விண்மீன் அமைப்புகளின் எஞ்சிய பாகங்கள் உள்ளன.
  • ஒரு இரும விண்மீன் அமைப்பில் உள்ள ஒரு நட்சத்திரம் அதன் இணை விண்மீன் அமைப்பினை விட வேகமாகப் பரிணமிப்பதால் வலைப் பின்னல் அமைப்புகள் உருவாகின்றன.
  • இரும விண்மீன் அமைப்பு என்பது அவை ஒன்றுக்கொன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப் பட்டுள்ள நிலையில் இரண்டு நட்சத்திரங்கள் ஒரு பொதுவான மையத்தைச் சுற்றி வருகின்ற அமைப்பாகும்.
  • மிகுவேக சுழற்சி விண்மீன் அமைப்புகள் வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகும்.
  • கிட்டத்தட்ட முற்றிலும் நியூட்ரான்களால் ஆனவை என்பதோடு அவை 20 கி.மீ. (12 மைல்கள்) அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்டவை என்பதால் அவை மிகவும் அடர்த்திமிகு நட்சத்திரங்கள் ஆகும்.
  • அவை விண்வெளி முழுவதும் செறிவுமிக்க கதிர்வீச்சினை வெளியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்