TNPSC Thervupettagam

முதலாவது “குளிர்த் தெளிப்பு” ஸ்மார்ட் ஆய்வகம்

April 16 , 2019 2051 days 628 0
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது விமான என்ஜின் (இயந்திர) பொருட்களுக்கான மேம்படுத்தப்பட்ட சேவைகள் தொழில்நுட்பத்தை வளர்ச்சி பெறச் செய்வதற்கு ஒரு ஆய்வகத் துறையை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் குழுமமான ஜெனரல் எலக்ட்ரிக் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • “குளிர்த் தெளிப்பு” ஸ்மார்ட் (மேற்பரப்பு மாற்றம் மற்றும் சேர்பொருள் ஆராய்ச்சித் தொழில் நுட்பங்கள்) ஆய்வகம் என்பது இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்விசார் நிறுவனங்களிலும் அமைக்கப்படாத இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வகமாகும்.
  • இது மேம்பட்ட உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது விமான என்ஜின் பயன்பாடுகளுக்கான செயல்முறைகளை ஒருங்கிணைக்கப் பயன்படும்.
  • குளிர்த் தெளிப்புத் தொழில்நுட்பமானது மற்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் வெப்பத் தெளிப்பு செயல்முறைகளிலிருந்து வேறுபட்டுள்ளது. இதில் பொடிகளின் உருகுதல் தன்மை மற்றும் விஷத் தன்மை ஆகியவை இல்லை.
  • எனவே உயர் ரகப் பூச்சை ஏற்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்