இந்தியாவின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மே 21 ஆம் தேதியை “சர்வதேச தேநீர் தினமாக” அறிவிப்பது குறித்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் 2019 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
சீனாவிற்குப் பிறகு தேயிலையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
இந்தியா உலகின் மொத்தத் தேயிலை உற்பத்தியில் 23%ஐக் கொண்டுள்ளது.
மேலும் கருப்புத் தேயிலையை உற்பத்தி செய்து அதனை நுகரும் உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.