TNPSC Thervupettagam

முதலாவது டெல்டா தரவரிசை

July 2 , 2018 2212 days 602 0
  • நிதி ஆயோக் 108 உயர்லட்சிய மாவட்டங்களுக்கான முதலாவது டெல்டா தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2018 ஆகிய இரண்டு மாதங்களில் 5 வளர்ச்சிப் பகுதிகளில் அடைந்த முன்னேற்றத்தைக் கணக்கிட்டு இந்தத் தரவரிசைப் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த டெல்டா தரவரிசையின் நோக்கமானது உயர்லட்சிய மாவட்டங்களில் உள்ள சக்தி வாய்ந்த அணிகளுக்கிடையே போட்டி உணர்வைத் தூண்டுவதாகும்.
  • டாகோட் (குஜராத், தரவரிசை 1வது), மேற்கு சிக்கிம் மாவட்டம் (சிக்கிம், 2வது), இராமநாதபுரம் மாவட்டம் (தமிழ்நாடு, 3-வது), விஜயநகரம் (ஆந்திரப் பிரதேசம், 4-வது) மற்றும் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம், 5-வது) ஆகியவை மிகவும் மேம்பட்ட மாவட்டங்களாகும்.
  • குப்வாரா (ஜம்மு காஷ்மீர்), பெகுசாராய் (பீகார்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), சிம்டேகா (ஜார்க்கண்ட்) மற்றும் ஹகாரியா (பீகார்) ஆகியவை முறையே ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசைப்படுத்தப்பட்ட குறைவான முன்னேற்றமடைந்த மாநிலங்களில் உள்ள உயர் லட்சிய மாவட்டங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்