TNPSC Thervupettagam

முதலாவது பிளாஸ்டிபஸ் (வாத்தலகி) சரணாலயம்

March 7 , 2021 1234 days 612 0
  • ஆஸ்திரேலியாவானது உலகின் முதலாவது வாத்தலகி (platypus) சரணாலயத்தைத் திறக்க உள்ளது.
  • இது மறைந்து வரும் உள்ளூர் இனங்களைக் காப்பதற்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • வாத்து போன்ற தோற்றம் கொண்ட வாத்தலகி ஆனது ஆஸ்திரேலியாவில் மட்டுமே இருக்கும் ஒரு தனித்துவ உயிரினமாகும். இது காலநிலை மாற்றப் பிரச்சினையுடன் தொடர்புடைய காட்டுத் தீ மற்றும் வறட்சி ஆகியவற்றின் காரணமாக அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
  • உலகம் முழுவதும் இது போன்ற ஒரு சரணாலயம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இது ஒரு நேரத்தில் 65 வாத்தலகிகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது.
  • இந்த வசதியானது 2022 ஆம் ஆண்டில் தரோங்காவின் மேற்குச் சமவெளி விலங்கியல் பூங்காவில் கட்டப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்