முதலாவது மரபணு அடிப்படையிலான கோவிட் – 19 சோதனை
September 23 , 2020
1528 days
653
- சமீபத்தில் இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது “பெலுடா” (FELUDA) எனப்படும் மரபணு அடிப்படையிலான கோவிட் – 19 சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தச் சோதனைகளானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்டதாகும்.
- இது கோவிட் – 19 வைரஸைக் கண்டறிவதற்காக வேண்டி சிறப்புமிகு CRISPR மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
- இந்தச் சோதனையானது டாடா குழுமத்துடன் இணைந்து சிஎஸ்ஐஆர் – ஐடிஐபி- அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தச் சோதனையானது 2 மணி நேரத்திற்குள் இந்த வைரஸைக் கண்டறியும் திறன் கொண்டது.
- இந்த வைரஸைக் கண்டறிவதற்காக Cas9 புரதத்தைப் பயன்படுத்தும் உலகின் முதலாவது சோதனை இதுவாகும்.
- FELUDA என்பது FNCAS9 தொகுப்பு இணைக்கப்பட்ட ஒரே சீரான கண்டறிதல் என்பதன் சுருக்கமாகும்.
- இது ஒரு காகித பட்டைச் சோதனையாகும்.
Post Views:
653