TNPSC Thervupettagam

முதலாவது மரபணு அடிப்படையிலான கோவிட் – 19 சோதனை

September 23 , 2020 1435 days 618 0
  • சமீபத்தில் இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது பெலுடா” (FELUDA) எனப்படும் மரபணு அடிப்படையிலான கோவிட் – 19 சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தச் சோதனைகளானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்டதாகும்.
  • இது கோவிட் – 19 வைரஸைக் கண்டறிவதற்காக வேண்டி சிறப்புமிகு CRISPR மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
  • இந்தச் சோதனையானது டாடா குழுமத்துடன் இணைந்து சிஎஸ்ஐஆர்ஐடிஐபி- அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தச் சோதனையானது 2 மணி நேரத்திற்குள் இந்த வைரஸைக் கண்டறியும் திறன் கொண்டது.
  • இந்த வைரஸைக் கண்டறிவதற்காக Cas9 புரதத்தைப் பயன்படுத்தும் உலகின் முதலாவது சோதனை இதுவாகும்.
  • FELUDA என்பது FNCAS9 தொகுப்பு இணைக்கப்பட்ட ஒரே சீரான கண்டறிதல் என்பதன் சுருக்கமாகும்.
  • இது ஒரு காகித பட்டைச் சோதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்