TNPSC Thervupettagam

முதலாவது மிதக்கும் அணு உலை – இரஷ்யா

August 25 , 2019 1826 days 592 0
  • அகாடெமிக் லோமோனோசோவ் என்ற உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை இரஷ்யா தொடங்கியுள்ளது.
  • இது சைபீரியாவில் உள்ள முர்மன்ஸ்க் மற்றும் பெவேக் ஆகிய துறைமுகங்களுக்கிடையே 5000 கிலோ மீட்டர் பயணத் தொலைவைக் கொண்டிருக்கின்றது.
  • இது பெவேக்கிற்கு வந்தடைந்தால், உள்ளூர் அணுமின் நிலையம் மற்றும் நிலக்கரி ஆலை ஆகியவற்றிற்குப் பதிலாக இது செயல்படும்.
  • இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலானது ஆர்டிக்கில் ஹைட்ரோ கார்பன்களை தோண்டி எடுப்பதற்காக இரஷ்யாவினால் பயன்படுத்தப் படவிருக்கின்றது.
  • சுற்றுச்சூழல் ஆர்வக் குழுக்கள் இந்தத் திட்டத்தின் ஆபத்துகள் குறித்து நீண்ட காலமாக எச்சரித்துள்ளன. இந்தக் குழுக்கள் இதை ஒரு ஆபத்தான  பனிக் கட்டியின் மீது அமைந்து உள்ள செர்னோபில் மற்றும் அணுக்கரு டைட்டானிக் என்று குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்