இஸ்ரோ அறிவியலாளர்கள் நாசாவின் ICESat-2 செயற்கைக்கோளின் தகவலுடன் ஆடம்ஸ் பாலம் என்றும் அழைக்கப்படும் கடல் நீரில் மூழ்கியுள்ள இராமர் சேது என்ற பாலத்தின் விரிவான வரைபடத்தினை வெற்றிகரமாக வரைபடமாக்கியுள்ளனர்.
முழு பாலத்தையும் 10 மீட்டர் வரை தெளிவுத் திறன் கொண்ட வரைபடம் மூலம் காண இயலும்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 6 ஆண்டுகளில் இதற்கான தரவு சேகரிக்கப் பட்டது.
இது 29 மீட்டர் நீளமும், கடலுக்கு அடியில் இருந்து 8 மீட்டர் உயரமும் கொண்ட, கடலுக்கு அடியில் உள்ள அமைப்பின் முதல் வரைபடமாகும்.
இந்தப் பழமையான பாலம் ஆனது, இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையில் உள்ள தலைமன்னார் தீவுடன் இணைக்கிறது.
இராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களில் உள்ள பதிவுகளின் படி, 1480 ஆம் ஆண்டில் புயலால் சேதமாகும் வரை இந்தப் பாலம் ஆனது கடல் மட்டத்திற்கு மேல் இருந்தது.