எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, "போலரிஸ் டான்" என்ற ஒரு கலத்தினை விண்ணில் ஏவ உள்ளது.
இது பூமியிலிருந்து 870 மைல் தொலைவில் உள்ள பகுதிக்கு நான்கு நபர்களைக் கொண்டுச் செல்லும்.
சுற்றுப்பாதையில் உள்ள தகவல்தொடர்புகளைச் சோதிப்பதுடன், இந்தக் கலத்தின் குழுவினர் அதிக உயர நடவடிக்கைகள், முதலாவது வணிக ரீதியான விண்வெளிப் பயணம் மற்றும் உடல்நலம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.
இந்தத் தொலைவானது 1966 ஜெமினி 11 ஆய்வுத் திட்டம் மற்றும் 1972 அப்பல்லோ 17 திட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு எந்த ஒரு குழுவினாலும் மேற்கொள்ளப்பட்ட அதிக தூர விண்வெளிப் பயணத்தையும் விட அதிகமாகும்.