TNPSC Thervupettagam

முதலாவது வெளிநாட்டு நிதி

March 9 , 2021 1359 days 746 0
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) பரஸ்பர நிதியமானது தனது முதலாவது வெளிநாட்டு நிதிச் சலுகையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • SBI சர்வதேச அணுகல் – அமெரிக்க முதலீட்டுப் பங்கு எஃப்ஒஎஃப் (FOF) என்ற பெயரில் இந்த நிதியானது ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில் / இடிஎப் (ETF) நிதிகளில் முதலீடு செய்யும் ஒரு திறந்தநிலை நிதித் திட்டமாகும். இது வெளிநாடுகளில் வசிக்கின்றவர்களால் அமெரிக்கச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றது.
  • இந்தத் திட்டமானது அதன் நிகர சொத்துக்களில் 95-100 சதவீதத்தைப் பொதுவாக அமெரிக்க முன்னோடி நிதியமான (இடிஎப் உட்பட) அமுண்டி நிதியத்தில் முதலீடு செய்யும்.
  • அது அமெரிக்கச் சந்தைகளில் முக்கியமாக முதலீடு செய்கின்றது.
  • இத்திட்டத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் முதல் முறையாக குறைந்தது ரூ 5,000 என்ற அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
  • இருப்பினும், கூடுதலாக வாங்குவதற்கு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ 1,000 ஆகும்.
  • இந்த நிதியில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு என்றும் எதுவும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்