TNPSC Thervupettagam

முதலாவது வேளாண் பொருள் ஏற்றுமதி வசதி வழங்கும் மையம்

May 20 , 2021 1194 days 572 0
  • மகாராஷ்டிரா வர்த்தகத் தொழில்துறை மற்றும் வேளாண் மன்றம் மற்றும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD - National Bank for Agriculture and Rural Development) ஆகியவை இணைந்து முதலாவது வேளாண் பொருள் ஏற்றுமதி வசதி வழங்கும் மையத்தினைத் தொடங்கியுள்ளன.
  • மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் இந்த மையமானது உறுதுணையாக செயல்படும்.
  • மகாராஷ்டிரா மாநிலமானது,
    • அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது.
    • முன்னணி பருப்பு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது.
    • மோட்டா தானிய (coarse cereals) உற்பத்தியில் இரண்டாமிடத்திலும்
    • சோயா பருப்பு, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும்
    • சூரியகாந்தி உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்