TNPSC Thervupettagam

முதலீடுகளை ஈர்க்கக் கூடிய சிறந்த மாநிலங்கள் - ரிசர்வ் வங்கி

February 16 , 2020 1617 days 496 0
  • முதலீடுகளை ஈர்க்கக் கூடிய சிறந்த மாநிலங்கள் குறித்த தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • 2018 - 19 ஆம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த செலவில் ஆந்திர மாநிலமானது அதிக பங்கைக் கொண்டிருந்தது.
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இருப்பினும், 2014-15 ஆண்டு முதல் 2018-19 ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் இருந்தது.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு திட்டம் அனுமதிக்கப் படுவதனைத் தீர்மானிக்கும் காரணிகள் பின்வருமாறு:
    • திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடம்
    • மூலப்பொருட்களின் அணுகல்
    • திறமையான உழைப்பாளர்கள் கிடைத்தல்
    • போதுமான உள்கட்டமைப்பு
    • சந்தை அளவு
    • வளர்ச்சி வாய்ப்புகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்