இது இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) தொடங்கப்பட்டது.
இது BSE (மும்பை பங்குச் சந்தை), NSE (தேசியப் பங்குச் சந்தை), NCDEX (தேசிய சரக்கு மற்றும் சார்பு பொருள் சந்தை), MCX (பல்பொருள் பரிமாற்றம்) மற்றும் இந்தியாவின் பெருநகரப் பங்குச் சந்தை (MSE) ஆகிய அனைத்து பங்குச் சந்தைகளால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
வர்த்தக உறுப்பினர் அல்லது பங்குத் தரகர் எதிர்கொள்ளும் தொழில்நுட்பக் கோளாறுகளின் போது முதலீட்டாளர்களுக்கு ஒரு ‘பாதுகாப்புக் கட்டமைப்பினை’ வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் நோக்கமா ஆனது, முதலீட்டாளர்களுக்கு தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது எதிர்பாராதச் செயலிழப்புகள் ஏற்பட்டால் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி தளத்தில் உள்ள தங்களின் பங்கு நிலைகளை அதே நாளில் விற்க/ அதன் விற்பனையை நிறுத்துவதற்கு மற்றும் நிலுவையில் உள்ள விற்பனைகளை ரத்து செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாகும்.