- 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 1 லட்சம் கோடி டாலராக (அ) ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என தமிழக முதல்வர் இந்த மாநாட்டில் தெரிவித்தார்.
- 2030 ஆம் ஆண்டுக்குள் 23 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்குமான ஒரு இலக்கினையும் அவர் நிர்ணயித்துள்ளார்.
- சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் 35 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
- இவை 17,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டினை உள்ளடக்கியதாகும்.
- தற்போதுள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்காக வேண்டி 24 துறைகளின் கீழ்வரும் 100க்கும் மேற்பட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஒற்றைச் சாளர தளத்தின் 2வது பதிப்பினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
- தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதலீட்டை ஊக்குவிப்பிதற்கான மாநிலத் தலைமை நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு எனும் ஒரு நிறுவனமானது அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
- டிஜிட்டல் உத்வேக திட்ட அமைப்பானது புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவியை வழங்கி உள்ளது.
- இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
சில முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள்
- மகேந்திரா வேல்டு சிட்டியில் டென்மார்க் நாட்டு வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான டைநெக்சின் உற்பத்தி அலகும், ஈரோட்டில் கோரல் மேனுஃபேக்சரிங் ஒர்க்சின் உற்பத்தி அலகும் தொடங்கப் பட்டுள்ளன.
- ஓசூரில் INOX ஏர் பிராடக்ட்ஸ் (வாயு சாதனங்கள்) நிறுவனத்தின் திரவ ஆக்சிஜன் ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் JSW ரிநியூ எனர்ஜி டூ லிமிடெட் நிறுவனத்தின் ஒப்பந்தம்.
- ஓரகடத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் ஜெர்மன் நாட்டின் ZF வாப்கோ நிறுவனத்தின் ஒப்பந்தம்.
- அம்பத்தூரில் சிங்கப்பூர் நாட்டின் கேபிட்டா லாண்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம்.
- கோயம்புத்தூரில் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்.
- சிறுசேரி சிப்காட் IT பார்க் – TCS Phase III.