இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (Securities and Exchange Board of India - SEBI) வளர்ந்து வரும் முதலீட்டு ஆலோசகர்களுக்காக ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பை (SRO - self-regulatory organisation) பரிந்துரைத்துள்ளது.
இது நிறுவனங்களினால் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையின் தரம் குறித்த பிரச்சனைகளைக் களையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
மேலும் SRO ஆனது முதலீட்டிற்கான ஆலோசகர்களால் வசூலிக்கப்படும் அதிக கட்டணம், வருமானத்தை ஈட்டுவதற்குத் தவறான உத்தரவாதத்தை அளித்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.