வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமைப்பின் (UNCTAD - UN Conference on Trade and Development) முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலகளாவிய அன்னிய நேரடி முதலீடுகள் 2021 ஆம் ஆண்டில் வலுவான மீட்சியைக் கண்டன.
இது 77 சதவீதம் உயர்ந்து 1.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில், அன்னிய நேரடி முதலீட்டு வரவானது 929 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இந்த அறிக்கையின்படி, வளர்ந்த நாடுகள் இதுவரையில் மிகப்பெரிய உயர்வைக் கண்டன.
2021 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடானது 2020 ஆம் ஆண்டில் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 777 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
இந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டு வரவானது 26 சதவீதம் குறைவாக இருந்தது.
ஏனென்றால், 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பெரிய M&A ஒப்பந்தங்கள் (இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள்) மீண்டும் பதிவு செய்யப் படவில்லை.