TNPSC Thervupettagam

முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை

January 23 , 2022 1038 days 481 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமைப்பின் (UNCTAD - UN Conference on Trade and Development) முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • உலகளாவிய அன்னிய நேரடி முதலீடுகள் 2021 ஆம் ஆண்டில் வலுவான மீட்சியைக் கண்டன.
  • இது 77 சதவீதம் உயர்ந்து 1.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில், அன்னிய நேரடி முதலீட்டு வரவானது 929 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • இந்த அறிக்கையின்படி, வளர்ந்த நாடுகள் இதுவரையில் மிகப்பெரிய உயர்வைக் கண்டன.
  • 2021 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடானது 2020 ஆம் ஆண்டில் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 777 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
  • இந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டு வரவானது 26 சதவீதம் குறைவாக இருந்தது.
  • ஏனென்றால், 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பெரிய M&A ஒப்பந்தங்கள் (இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள்) மீண்டும் பதிவு செய்யப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்