தமிழ்நாடு சுகாதார அமைச்சகமானது, ‘முதல் 1000 – சிறந்த ஆரோக்கியமான நாட்கள்’ என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
முதல் 1,000 நாட்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச் சத்து அளவினைக் கண்காணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆற்காடு அருகே திமிரி தொகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இது தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டமானது, மோசமான நிலையில் உள்ள தாய் மற்றும் குழந்தை சுகாதார குறி காட்டிகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து 23 சமூகச் சுகாதார நிலையங்கள் மற்றும் 116 ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செயல் படுத்தப் படுகிறது.
இரண்டு ஆண்டுகளில், இந்த முன்னெடுப்பின் கீழ் சுமார் 74,400 குழந்தைகளுக்கு இதன் பயன்கள் வழங்கப் படும்.