ஈக்விட்டி மாஸ்டரின் அறிக்கையின் படி, இந்திய மருந்துச் சந்தையானது அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரியச் சந்தையாகவும் மதிப்பின் அடிப்படையில் 14வது பெரியச் சந்தையாகவும் உள்ளது.
இந்தியா தற்பொழுது உலகின் வளர்ந்து வரும் முதல் ஐந்து மருந்துச் சந்தைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
யுனிசெப்பின் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மருந்து விநியோக வருடாந்திர அறிக்கையானது இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொதுவான மருந்து விநியோக நாடாக அங்கீகரித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஆப்பிரிக்காவும் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பாவும் விளங்குகின்றன.