TNPSC Thervupettagam
December 13 , 2017 2411 days 720 0
  • அரசு கணிணி இணையங்களின் மேல் நடத்தப்பெறும் சைபர் தாக்குதல்களை கண்காணிக்கவும், தணிப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிய உதவுவதற்கும் NIC-CERT எனும் அமைப்பை முதல்முறையாக மத்திய அரசு அமைத்துள்ளது.
  • தேசிய தகவல் மையத்தில் (National Information Centre) நடத்தப்பெறும் இணைய தாக்குதல்களை கண்டறியவும், தடுக்கவும், தாக்குதலின் தாக்கத்தை தணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக அமைப்பே NIC-CERT ஆகும்.
  • அனைத்து அளவிலான அரசு நிலைகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும்  தொலைத்தொடர்பு, அரசு மற்றும் குடிமகன்களுக்கு இடையே நடைபெறும் தொலைத்தொடர்பு ஆகியவை உட்பட NIC-ன் இணையவாயிலில்  உள்ள தரவுகளையும் கண்காணித்து அதன் மூலம் சைபர் தாக்குதல்களின் முன்கூட்டிய கண்டுபிடிப்பு மற்றும் உடனடித் தணிப்பு ஆகியவற்றை  மேற்கொள்ளுதலை  NIC-CERT  உறுதி செய்யும்.
  • NIC – CERT அமைப்பானது துறைவாரியான CERT அமைப்புகளுடனும், தேசிய அளவிலான CERT–IN அமைப்புடனும் நெருங்கிய கூட்டிணைவு மற்றும் ஒருங்கிணைப்பு கொண்டு செயல்படும்.
CERT
  • CERT – (Computer Emergency Response Team) ஆனது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு தொடர்பான முன்னணி தேசிய நிறுவனமாகும்.
  • ஹேக்கிங், பிஷ்ஷிங் (Pishing) போன்ற பல்வேறு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இது கையாளுகின்றது.
  • சைபர் தாக்குதல் நிகழ்வுகளின் கையாளுதலுக்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்வது, சைபர் தாக்குதல் நிகழ்வுகளின் தகவல்களை சேகரிப்பது, ஆராய்வது மற்றும் பரப்புவது இதன் முக்கியப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்