“மரைன் லிசாட்” (Marine Lizard) எனும் பெயருடைய நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய உலகின் முதலாவது ஆயுதங்கள் கொண்ட ஆளில்லாப் படகானது சீனாவால் சோதிக்கப்பட்டது.
இது சீனாவின் பெய்டோ வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பால் வழி நடத்தப்படுகின்றது.
நிலம் மற்றும் நீரில் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய இது வான்வழி ஆளில்லா விமானங்கள் மற்றும் இதர ஆளில்லா கப்பல்களுக்கு எதிராகப் போர் முனையத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இதனால் தானே பயணித்தல், தடைகளைத் தவிர்த்தல், பாதைகளைத் திட்டமிடல் போன்ற வசதிகளுடன் மின்னணு ஒளியியல் அமைப்பு மற்றும் ரேடார் அமைப்பு ஆகியவற்றையும் இது உள்ளடக்கியது.