TNPSC Thervupettagam

முதல் இந்திய பங்குச் சந்தை – DOSM அங்கீகாரம்

May 23 , 2018 2379 days 837 0
  • இதற்கு முன்னர் மும்பை பங்குச் சந்தை என அழைக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தை லிமிடெட் (Bombay Stock Exchange Ltd – BSE) வரையறுக்கப்பட்ட கடல் தாண்டிய சந்தை (Designated Offshore Securities Market - DOSM) என அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனத்தினால் (United States Securities and Exchange Commission - US-SEC) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த தகுதியைப் பெறும் முதல் இந்திய பரிவர்த்தனை நிறுவனம் BSE ஆகும்.

  • DOSM அந்தஸ்து ஆனது, BSE–ன் வர்த்தக இடத்திலிருந்தே (Trading Point) அமெரிக்க வர்த்தக முதலீட்டாளர்களுக்கு US SECயின் அனுமதியில்லாமல் பங்குகளை விற்பனை செய்ய அனுமதியளிக்கிறது.
  • இந்த வழிமுறையானது, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவதோடு அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவின் வைப்புத் தொகை பற்றுச்சீட்டுகள் (Indian Depository Receipts - IDRs) மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது.
  • BSE என்பது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், தலால் தெருவில் அமைந்துள்ள இந்திய பங்குச் சந்தை ஆகும். 1875-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட BSE ஆசியாவின் முதல் பங்குச் சந்தை ஆகும்.
  • ISO 9001: 2000 எனும் தரச்சான்றை பெறும் முதல் இந்திய மற்றும் உலகின் இரண்டாவது பங்குச் சந்தை BSE ஆகும்.
  • மேலும், அதன் இணைய வர்த்தக அமைப்பிற்காக தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பின் தரநிர்ணயமான BS 7799-2-2002 சான்றைப் பெறும் முதல் இந்திய மற்றும் உலகின் இரண்டாவது பங்குச் சந்தை BSE ஆகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்